வெறுப்பில் இராஜினாமா செய்த லன்சா - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 March 2022

வெறுப்பில் இராஜினாமா செய்த லன்சா

 



மக்கள் கடும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் தன்னால் இராஜாங்க அமைச்சராக வலம் வர முடியாது என தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் நிமல் லன்சா.


ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக கடுமையாக உழைத்த நபர்கள் ஒவ்வொருவராக விலகி வரும் அதேவேளை விமல் - கம்மன்பில அண்மையில் பதவி நீக்கப்பட்டிருந்தனர்.


செயற்பட முடியாத அமைச்சரவையொன்றை வைத்துக் கொண்டு தாம் விரும்பியவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் உயரதிகாரமே நடைமுறையில் உள்ளதாக விமல் முன்னதாக குற்றஞ்சாட்டியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment