சப்புகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்.
கச்சா எண்ணை போதிய அளவு கையிருப்பு இல்லாததால் தொழிற்சாலை இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கையிருப்பு கிடைத்த பின்னர் மீண்டும் இஙக்க ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, அதற்கான கால வரையறையை தற்போது அறிவிக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment