நாட்டின் பொருளாதாரம் திக்குமுக்காடி வரும் நிலையில், அந்நிய செலவாணி பற்றாக்குறையாலேயே காரணம் எனவும் அதனைத் தீர்க்கவே தாம் முயல்வதாகவும் ஜனாதிபதி நேற்றிரவு நாட்டு மக்களுக்கு தெரிவித்திருந்தார்.
எனினும், இலங்கையின் தற்போதைய சூழ்நிலைக்கு, அடிப்படையில் நாணயத்தின் பெறுமதியை 'செயற்கையாக' நீண்ட காலம் பிடித்து வைத்திருந்தமையும் ஏற்றுமதி - இறக்குமதி திட்டமிடல் பிழைத்துப் போனதால் உருவாக்கப்பட்ட கேள்வியுமே காரணம் என்கிறார் உதய கம்மன்பில.
அத்துடன், வகைதொகையின்றி பணம் அச்சிட்டதன் ஊடாக சந்தையில் பொருட்களின் விலையேற்றத்துக்கும் அரசின் நடவடிக்கையே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment