அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறில்லையெனில் தேர்தலை நடாத்துமாறு சவால் விடுத்துள்ளார்.
ஆட்சியை எதிர்க்கட்சியிடம் ஒப்படைப்பதற்கு ஏதுவாக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என இன்று சமகி ஜன பல வேகய கொழும்பில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் வைத்து தெரிவித்த அவர், மாற்றீடாக ஜனாதிபதி தேர்தலை நடாத்துமாறு சவால் விடுத்துள்ளார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் இலங்கைக்கு எரிபொருள் வழங்க மூன்று மத்திய கிழக்கு நாடுகள் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment