நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டிலிருந்து மீள ஆகக்குறைந்தது ஏழு மாதங்களாகும் என தெரிவிக்கிறார் அமைச்சர் காமினி லொகுகே.
உலக அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இலங்கையரசு எதையும் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கின்ற அவர், டொலர் தட்டுப்பாட்டை தீர்ப்பதே பிரதான கடமையெனவும் விளக்கமளித்துள்ளார்.
எனவே, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதே தற்போது அவசியமான நடவடிக்கையெனவும் அதனூடாகவே டொலர் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment