பெற்றோலிய தயாரிப்புகளை கொள்வனவு செய்வதற்கு ஜனவரி மாதம் அவசரமாக உலகெங்கும் இலங்கையரசு தேடி வந்த 500 மில்லியன் டொலர் கடன் வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதிக்கான வங்கியினால் வழங்கப்படும் இக்கடன் வசதியானது 75 வீதமான பொருட்களை இந்திய உற்பத்தியாளர்களிடமிருந்தே கொள்வனவு செய்ய வேண்டும் எனும் நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஓகஸ்ட் மாதத்துக்குள் பாரிய தொகை கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய சூழ்நிலையில், பொருளாதார சரிவோடு இலங்கை அரசு திக்குமுக்காடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment