பாகிஸ்தான், வடமேற்கு பிராந்தியத்தில் ஷியா பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நேரத்தில் இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதுடன் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெஷாவர் பகுதியில் இதற்கு முன்னரும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment