அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 260 ரூபாவாக அறிவித்துள்ளது மத்திய வங்கி. இதேவேளை, கொள்வனவு விலையும் 250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டொலருக்கு எதிரான இலங்கை நாணய பெறுமதியைக் குறைப்பதற்கான நடவடிக்கையெடுக்கப் போவதாக அண்மையில் மத்திய வங்கி அறிவித்திருந்த போதிலும் விலைக் கட்டுப்பாடு சத்தியமற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேவேளை, கருப்பு சந்தையில் டொலருக்கான பெறுமதியும் வெகுவாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment