1500 பில்லியனைத் தாண்டி பணம் அச்சிடும் அரசு - sonakar.com

Post Top Ad

Sunday, 20 March 2022

1500 பில்லியனைத் தாண்டி பணம் அச்சிடும் அரசு

 



ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் இதுவரை 1500 பில்லியன் ரூபா  பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஆளுனர் கீர்த்தி தென்னகோன்.


இம்மாதத்தில் மாத்திரம் 133 பில்லியன் ரூபா இதுவரை அச்சிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


சர்வதேச நாண நிதியம் இலங்கையின் நிதி நிலவரத்தை ஆராய்ந்து தீர்வளிக்க முன்பதாக நாணய பெறுமதியை செயற்கையாக அரசாங்கம் சீர்குலைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment