நாட்டின் பல்வேறு இடங்களில் இதுவரை 14 மோட்டார் சைக்கிள்கள் திருடியுள்ள சந்தேகத்தின் பேரில் 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குருநாகல, வரகாபொல, ஜாஎல, வெயங்கொட உட்பட பல இடங்களிலிருந்து திருடிய மோட்டார் சைக்கிள்களுடன் குறித்த நபரை கைது செய்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பொலிசார் நேற்று மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment