10 மணி நேர மின் வெட்டுக்கான சாத்தியம்: CEB - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 March 2022

10 மணி நேர மின் வெட்டுக்கான சாத்தியம்: CEB

 


எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மழையின்மையின் பின்னணியில் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள், இந்நிலை தொடர்ந்தால் மார்ச் நடுப்பகுதியளவில் தினசரி 10 மணி நேர மின் வெட்டு அமுலுக்கு வரும் சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.


மார்ச் 5ம் திகதியோடு எரிபொருள் தட்டுப்பாடு நீங்கி, மின் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என நிதியமைச்சரும் எரிசக்தி அமைச்சரும் வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற போதிலும், இவ்வாரம் கிடைக்கக் கூடிய எரிபொருள் மேலும் ஒரு வார காலத்துக்கே போதுமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதேவேளை, நிதி கிடைத்தால் தன்னால் எரிபொருள் இறக்குமதி செய்ய முடியும் என கம்மன்பில பகிரங்கமாக கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment