விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும் என தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கிறார் ஞானசார.
இதற்கு ஜனாதிபதியும் சாதகமான பதிலைத் தந்துள்ளதாகவும் தெரிவிக்கின்ற அவர், தான் சிறைவாசம் அனுபவித்த காலப் பகுதியில், சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் தம்மையணுகி தமது வாழ்க்கைக் கதைகளை எடுத்துக் கூறியதாகவும் அதன் பின்னர் தான் அவர்களின் உண்மை நிலையைத் தாம் புரிந்து கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபர்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கத் தாம் பரிந்துரைத்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment