பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலத்தை மாத்திரம் குறைப்பதற்கான அரசின் நடவடிக்கையை நிராகரித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, குறித்த சட்டத்தை முற்றாக கைவிடுமாறு கோரியுள்ளது.
அறிக்கை மூலம் இதனை சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, சாதாரண சட்டத்தின் கீழான விசாரணைகள் போதுமானது என விளக்கமளித்துள்ளது.
நாடாளுமன்றிலும் இது தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை, அரசாங்கம் தடுத்து வைப்பதற்கான காலத்தை 18 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக குறைப்பதை மாத்திரமே அங்கீகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment