கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்களை ஆரம்பித்துள்ள நிலையில் , விலட்மிர் புட்டின் மீண்டும் ஐரோப்பாவுக்குள் யுத்தத்தை கொண்டு வந்துள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளது ஐரோப்பிய யூனியன்.
உக்ரைன் எல்லைக்குள் புகுந்துள்ள ரஷ்ய படையினர் இராணுவ தளங்கள், எல்லைப் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்களைத் தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த எட்டு வருடங்களாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர் உக்ரைனில் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், 130,000 க்கு அதிகமான படையினரை குவித்து ரஷ்யா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், தமது அருகில் மேலை தேசத்தின் கைப்பொம்மையாக உக்ரைன் இயங்கி வருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நேட்டோ நேச நாடுகள் அணியில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு வெளியிட்டதன் தொடர்ச்சியில் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment