இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குக் கடன் வழங்குவதைத் தவிர்க்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி ஆளுனர் பணிப்புரை வழங்கியிருந்ததாக நேற்றைய தினம் பரவலாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், தான் அவ்வாறு எதுவும் சொல்லவில்லையெனவும் அரச வங்கிகள், தனியொரு நிறுவனத்துக்கு கடன் வழங்கும் 'அளவை' பேணுமாறே தான் அறிவுறுத்தியிருந்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.
ஏலவே டொலர் தட்டுப்பாடு மற்றும் நிர்வாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு இனி எங்குமே கடன் கிடைக்காது என்ற சூழ்நிலை பாரிய விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment