போமலின் பற்றாக்குறை: மரண சடங்குகள் பாதிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 26 February 2022

போமலின் பற்றாக்குறை: மரண சடங்குகள் பாதிப்பு

 



நாட்டில் போமலின் பற்றாக்குறை நிலவுவதால் பிணங்களை பதனிடும் நடவடிக்கைகளை குறைக்க வேண்டியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் மரண சடங்குகளை சுருக்கி, 24 மணி நேரத்துக்குள் இறுதிக் கிரியைகளை நிறைவேற்றும் நிர்ப்பந்தம் இருப்பதாக இறுதி சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


தற்சமயம் ஒரு மாத காலத்துக்கான கையிருப்பே இருப்பதாகவும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு டொலர் பற்றாக்குறையே காரணம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment