பணம் அச்சிடுவதன் ஊடாக நாட்டை முன்னேற்ற முடியும் என அரசாங்கம் தெரிவித்து வருகிறது. அப்படியானால் வீட்டுக்கு வீடு பணம் அச்சிடும் இயந்திரமொன்றை வழங்க முடியுமே என விசனம் வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
நடைமுறை அரசாங்கம் வகை தொகையின்றி பணம் அச்சிட்டுள்ளதன் ஊடாக பண வீக்கம் வெகுவாக அதிகரித்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. ஆனால் உற்பத்தியை அதிகரிக்கவோ, ஏற்றுமதியை அபிவிருத்தி செய்யவோ அரசு எதுவித நடவடிக்கைகளையும் இது வரை செய்யவில்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.
நாட்டை முன்னேற்றுவது வெறுமனே பணம் அச்சிடல் ஊடாக நடைபெறக்கூடிய விடயம் என்றால் வீட்டுக்கு வீடு ஒரு இயந்திரத்தை வழங்குவது இலகுவான வழியெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment