எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே பொது வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவிக்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க.
மக்கள் ஆதரவு சஜித் பக்கம் வெகுவாக திரும்பியுள்ளதாகவும் அவரை மக்கள் பெருமளவு விரும்புவதாகவும் விளக்கமளித்துள்ள திஸ்ஸ, எதிர்க்கட்சிகளும் சஜித்துக்கு ஆதரவளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போதுள்ள சூழ்நிலையில், தான் ஆட்சியிலிருந்திருந்தால் நாடு பொருளாதார சிக்கலுக்குள் வீழ்ந்திருக்காது என சஜித் பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment