பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
2020 ஏப்ரல் மாதம், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலான விசாரணை என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த ஹிஜாஸ், 20 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அதேவேளை அவருக்கு பிணை வழங்குவதில் ஆட்சேபனையில்லையென சட்டமா அதிபர் கடந்த ஜனவரி 20 அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமக்கு பிணை வழங்கும் அதிகாரம் இல்லையென மறுத்திருந்த புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி, மேன்முறையீட்டு நீதிமன்றம் ஊடாக பிணையைப் பெற்றுக்கொள்ளும் படி அறிவுறுத்தியிருந்தார். இன்று வழக்கு விசாரணையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment