தங்கல்ல, விதரன்தெனிய பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி கொலையான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தென்பகுதி நெடுஞ்சாலையில் பணியாற்றி வந்த குறித்த பொலிஸ் ஊழியர் கொலையானதுடன் அவரது சகோதரர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு குழுக்கள் இடையிலான காணித் தகராறு காரணமாகவே சண்டை மூண்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment