இன்று இந்தியாவிடம் கடன் வாங்கி இன்றைய பிரச்சினையைத் தீர்த்து விட்டு, நாளைய பிரச்சினைக்கு வேறு எங்காவது கடன் வாங்கி நாளைய பிரச்சினையை தீர்க்கும் நிலைக்கு நாடு வந்து விட்டது என விசனம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா.
வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை, அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல போதுமான பொருளாதாரம் இல்லையென்ற நிலையில் மக்கள் முற்றாக முடங்கிக் கிடப்பதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இப்பின்னணியில் அரசும் - மக்களும் இறுகிப் போயுள்ளதாக வெலிமடையில் வைத்து அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment