இலங்கையின் திட்டமிட்ட அபிவிருத்திப் பயணத்தைத் தாம் சிறப்பாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் இதற்கு முன் ஆட்சியிலிருந்தவர்கள், வெளிநாடுகளுடன் சேர்ந்து பின்னிழுப்பதற்கான சதிகளை செய்து வருவதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
மஹிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு கை கோர்த்து செயற்பட்ட சக்திகள் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர்களாலேயே உள்நாட்டில் சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.
பொருளாதார பிரச்சினை சாதாரண வாழ்வியலை பாதித்துள்ள நிலையில் நடாத்தப்படும் மக்கள் போராட்டம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் யாவும் அரசுக்கு எதிரான சதியென ஆளுங்கட்சி பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment