வன்முறையைக் கைவிடுங்கள்; தலிபான் அரசு வேண்டுகோள்! - sonakar.com

Post Top Ad

Saturday, 26 February 2022

வன்முறையைக் கைவிடுங்கள்; தலிபான் அரசு வேண்டுகோள்!

 



உக்ரைனுக்குள் புகுந்துள்ள ரஷ்ய படையினர் தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இரு தரப்பும் வன்முறை வளர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது ஆப்கனிஸ்தானின் தலிபான் நிர்வாகம்.


உக்ரைன் தாக்குதல்களை கண்காணித்து வருவதாகவும் தமது வெளியுறவுக் கொள்கையடிப்படையில் 'நடுநிலை' வகிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், இரு வாரங்களுக்குள் உக்ரைனின் ஒட்டு மொத்த இராணுவ கட்டுக் கோப்பையும் ஆயுத பலத்தையும் இல்லாதொழிப்பதே நோக்கம் எனவும் ஆக்கிரமிப்பதில்லையெனவும் தெரிவிக்கும் ரஷ்யா, தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment