அடுத்த மாதமளவில் இந்திய பிரதமர் மோடி இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ராஜபக்ச அரசுடன் தோழமையைக் கட்டியெழுப்பியதாக முன்னர் காட்டிக் கொண்ட போதிலும் இலங்கை பாரிய பொருளாதார சிக்கலுக்குள்ளாகியுள்ள நிலையில் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வரும் இந்தியா, இலங்கை முக்கியஸ்தர்கள் பிரதமரை சந்திப்பதையும் தவிர்த்து வருகிறது.
தற்சமயம், ஜி.எல். பீரிஸ் இந்தியா சென்றுள்ள நிலையில் மோடி இலங்கை வரப் போவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment