இலங்கை தேசத்தின் இளைஞர்களின் நடவடிக்கைகள் நாடு மீண்டும் கற்காலத்துக்கு சென்று கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுவதாக விசனம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.
சங்கீத நிகழ்வொன்று இரத்துச் செய்யப்பட்டால் வாத்தியக் கருவிகள், மேடைகளை அடித்துடைத்து நொறுக்கும் காட்டுமிராண்டிச் செயற்பாடுகள் ஊடாக இளைஞர்கள் இவ்வாறு நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இளைஞர்கள் சமயத்துடனான தொடர்பை இழந்து வருவதும் இதன் காரணிகளுள் ஒன்றென அவர் பலபிட்டியவில் வைத்து விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment