கௌரவ பிரச்சினை; லன்சா பதவி விலகப் போகிறாராம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 16 February 2022

கௌரவ பிரச்சினை; லன்சா பதவி விலகப் போகிறாராம்

 


தமது அமைச்சில் இடம்பெறும் நிகழ்வுகளால் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கும் நிமல் லன்சா, தன்னுடைய சுய கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் நிமித்தம் பதவி விலகுவது தொடர்பில் தீவிரமாக ஆராய்வதாக தெரிவிக்கிறார்.

அமைச்சின் ஊழல்களுக்குப் பொறுப்பேற்று ஆணைக்குழுக்களுக்கு ஏறி இறங்கத் தாம் தயாரில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், உள்ளக பிரச்சினைகள் தமக்கு மிகுந்த அதிருப்தியளித்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

கடந்த அரசு வழங்கத் தவறிய 'நல்லாட்சியை' பெரமுன அரசினாலேயே வழங்க முடியும் என தேர்தல் காலத்தில் லன்சா தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment