ஸ்ரீலங்கன் விமான சேவை விமானிகள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
தமது வேண்டுகோள்கள் நிரகாரிக்கப்பட்ட நிலையில் இம்முடிவை எட்டியுள்ளதாக தெரிவிக்கும் தொழிற்சங்கம், தமது நிறுவனத்தில் போதிய விமானிகள் இல்லாத காரணத்தால் வழங்கி வந்த முழு ஒத்துழைப்பைக் குறைத்துக் கொள்ளப் போவதாகவும் தொழிற்சங்க நடவடிக்கை காலத்தில் தமது 'கடமைக்கான' நேரத்தில் மாத்திரமே பணியாற்றவுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளனர்.
இப்பின்னணியில் பொது விடுமுறை மற்றும் வருடாந்த விடுமுறை காலங்களில் நிறுவனத்தின் தேவைக்காக மேலதிகமாக பணியாற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளப் போவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment