சிறு குற்றங்களின் பின்னணியில் தண்டிக்கப்படுபவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு மாற்றீடாக வீட்டுக்காகவலில் வைக்கும் நடைமுறையை பரீட்சிக்க பரிந்துரைத்துள்ளது சிறைச்சாலை நிர்வாகம்.
ஐ.நா வில் முன்மொழியப்பட்ட டோக்யோ விதிகளின் அடிப்படையில் சிறு குற்றங்களுக்கு சிறைத் தண்டனையை தவிர்ப்பதற்கான முயற்சியெனவும் இதனூடாக சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறையை தீர்க்க முடியும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் வீட்டுக்காவலில் வைக்கப்படுவோர் தொழிநுட்ப உதவியில் கண்காணிக்கப்படுவர் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment