பிரசன்ன சொல்வது போல் நடக்காது: கம்மன்பில விசனம் - sonakar.com

Post Top Ad

Monday, 7 February 2022

பிரசன்ன சொல்வது போல் நடக்காது: கம்மன்பில விசனம்

 


சுற்றுலாத்துறை இயங்க ஆரம்பித்ததும் நாட்டின் டொலர் பற்றாக்குறை தீர்ந்து விடும், பொருளாதாரம் செழிப்படையும், அந்நியச் செலாவணி நிரம்பி வழியும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சொல்வது போல் எதுவும் நடக்காது என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.


இதனை விட, ஆட்சியாளர்கள் மக்களுக்கு நேர்மையான முறையில் தகவல்களை வழங்கி, இருக்கும் பிரச்சினையை ஏற்றுக் கொள்வதன் ஊடாக மக்கள் ஆதரவைப் பெருக்கிக் கொள்ள முடியும் என அவர் அறிவுரையும் வழங்கியுள்ளார்.


திரும்பச் செலுத்துவதற்கான வழிமுறைகள் ஆராயப்படாமலே வரவுக்கு மிஞ்சிய செலவை சமாளிக்க கடன்கள் பெறப்பட்டிருப்பதாகவும், வட்டியோடு திருப்பிச் செலுத்தும் நீண்ட கால பயணத்திலிருந்து உடனடியாக மீள முடியாது எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment