ஜனாதிபதியை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்காக வாக்களித்த 69 லட்சம் பேரும் தற்போது அழுது கொண்டிருப்பதாக ஜே.வி.பி பிரச்சாரம் செய்கிறது. ஆனால், அடுத்த தேர்தலில் அது மேலும் உயர்ந்திருப்பதைக் கண்டு வியப்படையப் போகிறார்கள் என்கிறார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.
ஜனாதிபதியின் சக்திமிக்க செயற்பாட்டினால் நாடு புதிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது எனவும் தெரிவிக்கின்ற அவர், அடுத்த மூன்று வருடங்களுக்குள் எதிர்பார்ப்புக்கு அதிகமான அபிவிருத்தியைக் காணலாம் என்கிறார்.
இதேவேளை, நடைமுறை அரசின் நன்மதிப்பு வெகுவாக உயர்ந்திருப்பதாகவும் இன்னொரு தேர்தல் வந்தால் அது நிரூபணமாகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment