இம்மாதத்தின் முதல் பத்து நாட்களில் மாத்திரம் 31,343 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. தற்சமயம், ரஷ்யாவிலிருந்தே அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை காணப்படுகிறது.
இதேவேளை, இரு வருடங்கள் உறவினர்களைப் பார்க்க முடியாமல் முடங்கியிருந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வைத்திருக்கும் இலங்கையரும் சுற்றுலாப் பயணிகளாகவே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment