ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பெரமுன உறவு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக இரு தரப்பிலிருந்தும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
பங்காளிகளாக இருந்தும் தமது கட்சியினர் மரியாதைக் குறைவாக நடாத்தப்படுவதாக ஆரம்பம் முதலே சுதந்திரக் கட்சியினர் முறையிட்டு வந்த நிலையில், அரசின் அங்கமாக இருந்து கொண்டு அரசாங்கத்தை சுதந்திரக் கட்சியினர் விமர்சித்து வருவதாக பெரமுனவினர் குறை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இரு கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களும் உறவை முறித்தாக வேண்டும் என தலைமைத்துவத்துக்கு அழுத்தம் வழங்கி வருவதாக தெரியவருகிறது. குறிப்பாக, சுதந்திரக் கட்சியினர் செயலாளர் தயாசிறியின் கருத்துக்களோடு தலைவர் மைத்ரிபால சிறிசேன உடன்பட்டுள்ள நிலையில் கூட்டணி முறிவு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment