கொழும்பு துறைமுக நகருக்குள் படம் பிடிப்பதற்கான கட்டணப் பட்டியல் வெளியாகி பாரிய விமர்சனங்களை உருவாக்கியுள்ள நிலையில், அது தொடர்பில் மேலதிக விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட மற்றும் குழு 'நிகழ்வுகள்', வருவாய் ஈட்டக்கூடிய படப்பிடிப்பு நடவடிக்கைகளுக்கே கட்டணம் அறவிடப்படும் எனவும் தனி நபர்கள் செல்பி எடுப்பதற்கு இவ்வாறு கட்டணம் எதுவுமில்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அறிவிடப்படும் கட்டணங்கள் துறைமுக நகரின் பராமரிப்புக்காகவே செலவு செய்யப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனினும், கட்டணங்கள் சீன வங்கியிலேயே வைப்பிலிடப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment