பி.பி ஜயசுந்தரவின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் செயலாளராக பணியாற்றி வந்த அவர் தற்போது ஜனாதிபதியின் செயலாளராக மாற்றம் பெற்றுள்ள அதேவேளை பாரிய அழுத்தங்களின் பின்னணியிலேயே பி.பி. ஜயசுந்திர பதவி விலக நேரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1984 முதல் பல்வேறு நிர்வாக சேவை பதவிகளில் காமினி செனரத் அனுபவம் பெற்றவராவார்.
No comments:
Post a Comment