சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதுதான் எஞ்சியிருக்கும் ஒரேவழியென விளக்கமளித்துள்ளார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.
இலங்கையின் பொருளாதார சிக்கல் சர்வதேச ரீதியில் அவதானத்தைப் பெற்றுள்ளதுடன் வெளிநாடுகள் கடன் வழங்குவதற்குத் தயக்கம் காட்டி வருகின்றன.
இந்நிலையிலேயே, ஐக்கிய இராச்சிய ஊடகம் ஒன்றுடனான நேர்காணலின் போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பசில் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைக்க அனுமதிக்க முடியாது எனவும் பெரமுனவின் பங்காளிகள் கடந்த காலத்தில் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment