ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிராக கூச்சலிட்ட காணொளியொன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததன் பின்னணியில் பெண்ணொருவர் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேறு ஒருவரால் பதியப்பட்ட காணொளியைப் பகிர்ந்தமைக்காக குறித்த பெண் விசாரிக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதியை 'அவமதிப்பது' குற்றச் செயல் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது கைத்தொலைபேசியில் இருந்த அனைத்து விடயங்களையும் சி.ஐ.டியினர் பிரதி செய்து எச்சரித்து அனுப்பியதாகவும் இது உரிமை மீறல் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment