இலங்கை மின்சார சபைக்கு, அடுத்த ஒரு வாரத்துக்குத் தேவையான டீசல் இன்று வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் உதய கம்மன்பில.
இப்பின்னணியில் முடங்கிக் கிடந்த எரிபொருள் கப்பல் ஒன்றிலிருந்து நேற்று இறக்குமதி செய்யப்பட்ட 10,000 மெற்றிக் தொன் டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
டொலர் தந்தால் எரிபொருளை இறக்குமதி செய்து தர முடியும் என கம்மன்பில முன்னர் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment