களனிதிஸ்ஸ மற்றும் சப்புகஸ்கந்த நிலையங்களுக்குத் தேவையான போதிய எரிபொருள் கிடைக்கப் பெறாவிட்டால் தினசரி ஒன்றரை மணி நேர மின் வெட்டு அமுலுக்கு வரும் என எச்சரிக்கிறது இலங்கை மின்சார சபை.
இன்றைய தினத்துக்குள் எரிபொருள் கிடைக்காவிட்டால் மின் வெட்டு நேர அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டொலர் தந்தால் மாத்திரமே எரிபொருளை இறக்குமதி செய்து தர முடியும் என அமைச்சர் கம்மன்பில ஏலவே பகிரங்கமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment