எரிபொருள் தட்டுப்பாட்டினால் இலங்கை மின்சார சபை பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் எரிபொருள் அமைச்சிடமிருந்து 'ஒத்துழைப்பு' இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மின்சார சபை, தேவைப்படும் டொலரைத் தந்தால் எரிபொருளை இறக்குமதி செய்து வழங்க முடியும் என பதிலளித்துள்ளார் உதய கம்மன்பில.
மின்சார சபை ஏலவே 920 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை 6500 மில்லியன் ரூபா நிலுவையில் வைத்திருப்பதாகவும் அவற்றை உடனடியாக செலுத்தும்படி அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment