மாலை 5.30 - 9.30 காலப்பகுதியில் ஒரு மணி நேர மின் வெட்டு அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் மின் வெட்டு நிகழ்ந்து வரும் நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள மின்சார சபை, குறித்த காலப்பகுதிக்குள் ஒரு மணி நேரம் மாத்திரம் வெ வ்வேறு பிரதேசங்களில் இவ்வாறு மின் விநியோகம் தடைப்படவுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
களனிதிஸ்ஸ மின் நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பழுது காரணமாக நேற்றிலிருந்து இவ்வாறு மின் வெட்டு அமுலுக்கு வந்துள்ளதாகவும் மறு அறிவித்தல் வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment