டொலர் தட்டுப்பாட்டினால் துறைமுகத்தில் தேங்கியிருந்த எரிபொருள் இறக்குமதி பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் கம்மன்பில.
பெற்றோல் இறக்குமதி முடிந்து விட்டதாகவும் மற்றைய கப்பலில் உள்ள டீசல் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கும் அவர், குறித்த நிறுவனங்களுக்கான பணம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் நாட்டில் எதுவித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையெனவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் டொலர் கடன் கேட்டு அரசு பல நாடுகளோடு பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment