தேவாலய கைக்குண்டு: ஓய்வு பெற்ற வைத்தியர் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 January 2022

தேவாலய கைக்குண்டு: ஓய்வு பெற்ற வைத்தியர் கைது

 


பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் 65 வயதான ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


பிலியந்தல வைத்தியசாலையில் முன்னர் கடமையாற்றியிருந்த வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது தனியார் சிகிச்சை நிலையத்தில் பணியாற்றிய காவலாளர் ஏலவே கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த நபர் நாரேஹன்பிட்ட வைத்தியசாலையிலும் இவ்வாறு கைக்குண்டொன்றை வைத்திருந்ததாகவும் சந்தேகப்படும் பொலிசார் 'நீண்ட' விசாரணையை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment