நடைமுறை அரசை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கு தாம் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பணியாற்றியிருந்த போதிலும் தம்மை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது என 'குறை' வெளியிட்டுள்ளார் முன்னாள் தெஹிவளை-கல்கிஸ்ஸ நகராதிபதி தனசிறி அமரதுங்க.
கொஹுவல மேம்பால நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் விழாவுக்குத் தன்னை அழைக்காத 'ஏக்கத்திலேயே' தனசிறி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் வெளிநாட்டு உதவியைப் பெறும் நன்றிக் கடனுக்காக அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளூர் பிரமுகர்களை புறக்கணித்துள்ளதாக தனசிறி ஆதங்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment