ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற பெயர்களின் இயங்கி வரும் இரு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களைத் தவிர ஏனையோர் நாடாளுமன்றில் அரசோடு இணைந்து இயங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தலைவர்களைத் தவிர்த்து ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களை ஒன்றிணைத்து புதிய முஸ்லிம் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு பெரமுன தரப்பில் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், தாம் தலைவர்களின் ஆசியோடும் அனுமதியோடுமே 20ம் திருத்தச் சட்டம் மற்றும் வரவு - செலவுத் திட்டம் உட்பட முக்கிய விவகாரங்களில் அரசுக்கு ஆதரவளித்ததாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment