பதவி பறிக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்தும் நீக்குவதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கட்சி செயலாளர், மத்திய குழு கூடி இது குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் சுசிலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கட்சி மட்டத்தில் அழுத்தம் நிலவுவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
தீர்மானங்களை எங்கோ எடுத்து விட்டு வந்து, நாடாளுமன்றில் கையுயர்த்தச் சொல்லும் போதெல்லாம் கையுயர்த்துவதற்கு தாம் பாடசாலைக் குழந்தையில்லையென சுசில் பொங்கியெழுந்த நிலையில் அவர் பதவி நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment