ஜனநாயக வழிமுறைக்குப் புறம்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தல்களைப் பின் போட அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை தொடர்பில் நாட்டு மக்களுக்கு தகுந்த விளக்கமளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறது ஜே.வி.பி.
மாகாண சபைகள் அமைச்சருக்கு ஒரு வருடத்துக்கு தேர்தலைப் பின் போடும் அதிகாரம் இருப்பினும் கூட அதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது ஜனநாயக நடைமுறையாகும். எனினும், அரசு காரணம் எதுவுமின்றி தேர்தலை பின் போடுவதாக அறிவித்துள்ளதாக டில்வின் விசனம் வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் தேர்தலுக்கு முகங்கொடுக்க அச்சப்படுகிறது என்பதைத் தவிர வேறு எதுவித நியாயமான காரணங்களும் இல்லையென அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment