தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கார்டினல் மல்கம் ரஞ்சித் விமர்சனம் வெளியிட்டுள்ளமை ஏற்புடையதல்லவெனவும் அவர் அவசரப்படுவதாகவும் தெரிவிக்கிறார் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன.
குறித்த விவகாரத்தில் பொலிசார் பாரபட்சமான மற்றும் பாதி விசாரணையை நடாத்துவதாக ஊடக சந்திப்பொன்றை நடாத்தி கருத்து வெளியிட்ட கார்டினல் மேலதிக வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் விசாரணை ஒரிரு மணித்தியாலங்களில் நிறைவடையக் கூடியதில்லையெனவும் அதற்கு 'காலம்' தேவைப்படும் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment