சர்ச்சைக்குள்ளான சீன நிறுவன கட்டண விவகாரம் இன்று முடிவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலில் கட்டணத்தை செலுத்த மறுத்த இலங்கை வங்கி இன்று 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனத்தால் அனுப்பப்பட்டிருந்த பசளை தரக்குறைவானதும் ஆபத்தானதுமென தெரிவிக்கப்பட்ட நிலையில் இவ்விழுபறி ஆரம்பித்திருந்தது. எனினும், தாம் தரமான பசளையையே அனுப்பியதாக தெரிவித்த சீன நிறுவனம் உலக அளவில் இலங்கைக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே கட்டணம் தடைப்பட்டிருப்பதாக தெரிவித்த இலங்கை அரசு, தற்போது நீதிமன்ற உத்தரவை இரத்துச் செய்யும் தீர்ப்பைப் பெற்று பணத்தை செலுத்துவதாகவும், சீன நிறுவனம் புதிய பசளைத் தொகையை அனுப்பி வைக்கவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment