சிறைச்சாலையிலிருந்தே தனது உயர் கல்வியைத் தொடர்வதற்கு ரஞ்சன் ராமநாயக்க முன் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது சிறைச்சாலை நிர்வாகம்.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி மறுத்துள்ள நிலையில் நான்கு வருடங்கள் சிறையிலிருக்கப் போகும் தாம் உயர் கல்வியைத் தொடரப் போவதாக ரஞ்சன் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, ரஞ்சன் விடுவிக்கப்பட்டால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க ஏதுவாக தான் இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment