தற்போது நிலவும் பால் மா தட்டுப்பாடு ஆகக்குறைந்தது பெப்ரவரி நடுப்பகுதி வரை தொடரும் என பால் மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவிக்கிறது.
கடன்வசதியுடனான இறக்குமதிக்கு தற்போது வாய்ப்பில்லையெனவும் நாட்டில் டொலர் பற்றாக்குறையினால் வங்கிகள் இவ்விவகாரத்தில் முடங்கிப் போயுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நடைமுறை அரசாங்கம் பதவியேற்ற காலத்திலேயே இறக்குமதி கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டு வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment